Poems
Poetry Challenge
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா.
E
Eganathan. M@egan2004
November 13, 20261 min read5 views
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? ஆகாசம்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? இந்த ஆகாசம்.
பத்து மாசம் உன் வயிற்றில் பக்குவமா நான் இருந்தேன்,
ஈ, எறும்பு அண்டாம உன் மாருல நான் கிடந்தேன்.
ஊராரு கண்ணு பட்டா, திருஷ்டி சுத்தி நீ போடுவ. ஊருக்குள்ள நான் நடந்தா, “எம்புள்ள மகராசன்”னு மெச்சிக் கொட்டி மகிழ்ந்திருவ.
பாராட்டிச் சீராட்டி நீயும் என்னை அழாக்கி, பட்டப்படிப்பு நான் படிக்க பள்ளிக்கூடம் அனுப்பி வெச்ச.
நீ பட்ட கடன நான் அடைக்க, இன்னும் எத்தனை யுகம் நான் எடுக்க?
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? ஆகாசம்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? இந்த ஆகாசம்.
என் உடம்பு காயப்பட்டா, உன் மனசுதான் தாங்கிடுமா? இத்தனைக்கும், என் உசுரு உன் ரத்தத்தில் பிறந்ததம்மா.
உன் கஷ்டத்த நானும் கண்டா, என் சித்தமும் கலங்குதம்மா.
நிலாவைக் காட்டி வெச்சு, சோறு தான் ஊட்டி விட்ட உன் மடியில் நான் இருந்தா, அந்த ஆகாசமும்
கீழ்தான்.
உன் பிள்ளை முகம் பாக்காம, உன் மனசுதான் தாங்கிருமா? அந்த நொடி நீ நினைக்க, உன் முன்ன வந்து நானும் நிப்பேன்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? ஆகாசம்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? இந்த ஆகாசம்.
இன்னும் என்ன நான் எழுத? வார்த்தைகளும் சிக்கவில்லை.
மெட்டெடுத்து நான் படிக்க, தாளங்களும் கிட்டவில்லை.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா? ஆகாசம்.
என் தாயின் அன்புக்கு ஈடாகுமா இந்த ஆகாசம்.....
...✍🏻 ஏகன்
Reviews (0)
Join Creative Garden to post a review.
